தவித்த வாய்க்கு தண்ணீர் வழங்கிய மத்திய நிதி அமைச்சர்…

Tamil News large 3025764 - 2026

என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், மேடை பேச்சின் குறுக்கே அதன் நிர்வாக இயக்குனர் பத்மஜா, ஓட்டல் ஊழியரிடம் தண்ணீர் கேட்க, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே தனது மேஜை மீது இருந்த குடிநீரை கொண்டு வந்து வழங்கினார். இதனை கண்டு அரங்கத்தினர் அசந்து போய் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.அந்த வீடியோ சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.

பங்குச்சந்தை சார்ந்த பொதுத் துறை நிறுவனம் என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனம். நூற்றாண்டுக்கும் மேலான துடிப்பான பங்குச்சந்தையை கொண்டிருக்கும் இந்தியா, காகித அடிப்படையிலான பங்கு வர்த்தகத்தை செய்து வந்தது. 1996ல் என்.எஸ்.டி.எல்., ஆகஸ்டில் உருவாக்கப்பட்டு அந்த சிக்கலான வர்த்தக முறை மாற்றம் காண துவங்கியது. தற்போது வெள்ளி விழா காணும் என்.எஸ்.டி.எல்., உலகின் மிகப்பெரிய பங்குகள் வைப்பு நிறுவனங்களில் ஒன்று.

சனிக்கிழமை மும்பையில் என்.எஸ்.டி.எல்., வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மாணவர்களுக்கான முதலீட்டாளர் விழிப்புணர்வு திட்டத்தையும், என்.எஸ்.டி.எல்லின் 25 ஆண்டு கால பயணத்தை நினைவுகூரும் அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.

முன்னதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு பேசிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் பேசியதால் அவருக்கு தண்ணீர் தேவைப்பட்டது. ஓட்டல் ஊழியரிடம் தண்ணீர் தருமாறு கேட்டார்இதனை கவனித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மேஜை மீது வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாட்டிலை, கோப்பையுடன் எடுத்துச் சென்று அவருக்கு பரிமாறினார். இதனை கண்டு திக்குமுக்காடிப் போனார் பத்மஜா. நிதியமைச்சரின் இந்த அன்பான செயலுக்கு நன்றி தெரிவித்தார். கூட்டத்தினரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories