தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளை ஏர்போர்ட் அதிகாரிகள் செக் செய்தனர். சென்னையை சேர்ந்த ஒரு இளைஞர் அட்டைப்பெட்டிக்குள் வெள்ளை நிற முள்ளம்பன்றி , டாமரின் குரங்கு குட்டி வைத்திருந்தார். வளர்ப்பதாக வாங்கி வந்ததாக இளைஞர் கூறியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து உயிரினங்களை வாங்கி வரும்போது , சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, விலங்குகளுக்கு மருத்துவ பரிசோதனை சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் இளைஞரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை.எனவே விலங்குகளை பறிமுதல் செய்தனர். தாய்லாந்துக்கே அனுப்ப ஏற்பாடு நடக்கிறது. இளைஞரிடம் சுங்க அதிகாரிகள் , மத்திய வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.தங்கம் பொருட்கள் கடத்தி வந்த விமானநிலையத்லில் விலங்குகள் கடத்தி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





