வீ்டு வணிக உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது .
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்ந்துள்ளது.
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,018க்கு விற்பனையாகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது.





