images 23 1 - 2026

ஒடிசாவில் ரயில் மோதி 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் பலி…

சற்றுமுன்

ஒடிசாவில் கியோஞ்சர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மோதியதில் இரண்டு குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
சம்புவா மலைத்தொடரின் ஜோயா வனபிரிவுக்கு உட்பட்ட பஞ்சபாணி அருகே 20 யானைகளின் கூட்டம் வியாழக்கிழமை இரவு ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குட்டி யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஒரு பெண் யானை மற்றொரு குட்டி யானை பலத்த அடிபட்டு காயமடைந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விபத்தை தொடர்ந்து யானைக்கூட்டம் வனத்துறையினரை மீட்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்தது .வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை நாள் முழுவதும் கண்காணித்து வந்தனர். மேலும் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் ரயிலின் வேகம் மணிக்கு 25 கிலோமீட்டராக குறைக்கப்பட்டுள்ளது .

சம்பவ இடத்தில் இருட்டாக இருந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என்று மற்றொரு வனத்துறை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கனிமவளங்கள் நிறைந்த ஒடிசா கியோஞ்சர் மாவட்டத்தில் ரயில் விபத்துகளால் யானைகள் அடிக்கடி இறப்பது குறித்து வன ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர் கடந்த 8 ஆண்டுகளில் 11 யானைகள் ரயில் விபத்துகளாலும் 4 யானைகள் ரோடு விபத்துக்களாலும் 13 யானைகள் மின்சாரம் தாக்கி இருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.ரயிலில் அடிபட்டு 3யானைகள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

images 23 1 - 2026
images 22 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.