வாட்ஸ்அப்: டிஜி லாக்கரை பயன்படுத்த..!

Published:

digi locker - 2026

மத்திய அரசு தன்னுடைய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் டிஜிட்டல் பயன்பாட்டை மக்களிடம் ஊக்குவித்து வருகிறது.

அந்த வகையில் மக்கள் தங்களுடைய ஆதார் கார்டு, பேன் கார்டு உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மூலமாக காட்டுவதற்கு டிஜி லாக்கர் என்ற செயலியை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் இந்த டிஜி லாக்கரை இனிமேல் வாட்ஸ் அப் மூலம் பயன்படுத்தக்கூடிய புதிய வசதி விரைவில் வர உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த புதிய சேவையை மக்கள் தங்களுடைய வாட்ஸ் அப் மூலம் பயன்படுத்த +91 9013151515 என்ற வாட்ஸ் அப் பாட்டை அழைக்க வேண்டும்.

அந்த நம்பருக்கு ‘Namaste or Hi or Digilocker’ என்று அழைக்க வேண்டும். அதன்மூலம் மக்கள் தங்களுடைய டிஜி லாக்கரிலுள்ள சேவைகளை பயன்படுத்த முடியும்.

டிஜி லாக்கரில் மக்கள் தங்களுடைய பேன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்.இ10வகுப்பு, வாகன சான்றிதழ், இருசக்கர வாகன காப்பீட்டு உரிமம், காப்பீட்டு உரிமம் ஆகியவற்றை பயன்படுத்த முடியும்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

கொரோனா காலத்தில் மத்திய அரசு வாட்ஸ் அப் பாட் மூலம் கொரோனா தடுப்பூசி, கொரோனா சிகிச்சை தொடர்பான சேவைகளை அளித்து வந்தது.

அந்த வகையில் தற்போது டிஜி லாக்கர் சேவையையும் இந்த பாட் மூலம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் டிஜிட்டல் தளத்தை எளிதாக பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. இந்த சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ் ஆப் மூலம் டிஜி லாக்கரை பயன்படுத்துவது எப்படி?

பயனர்கள் ‘ஹாய் அல்லது நமஸ்தே அல்லது டிஜிலாக்கர்’ என்ற செய்தியை, “9013151515” என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

உங்களுக்கு டிஜிலாக்கர் சேவைகள் வேண்டுமா என்ற கேள்விகளுக்கு பதிலளித்து வேண்டிய சேவையை பெற முடியும்.

டிஜி லாக்கரில் உங்களுக்கு ஏற்கனேவே கணக்கு இருந்தால், அந்தக் கணக்கில் இருந்து பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்றவற்றின் பட்டியலை வாட்சாப்பில் பெறுவீர்கள்.

இதிலிருந்து வேண்டியவற்றை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், வாட்ஸ்அப்பில் MyGov ஹெல்ப் டெஸ்க் உருவாக்கப்பட்டது. முன்னதாக, இது MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் என இருந்தது.

இது தடுப்பூசி முன்பதிவுகள் மற்றும் நோய்த்தடுப்புச் சான்றிதழ் பதிவிறக்கங்கள் போன்ற தொடர்புடைய தகவல்களை வழங்கியது.

இதன் மூலம் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

மேலும் 33 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img