அல்டிமேட் அருகில் நின்றால் அபார எனர்ஜி..: தயா அழகிரி ட்விட்!

Published:

ajith 3 - 2026

தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோவாக வலம் வருபவர் அஜித் குமார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதைத் தொடர்ந்து அஜித் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி. அவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

நடிகர் அஜித் குடும்பத்தினரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை அடுத்து எச்.வினோத், அஜித் மற்றும் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!
ajith 1 - 2026

இந்தப் படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் நடிகர் சமுத்திரக்கனியும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாளுக்கு நாள் அஜித் 61 படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் அண்மையில் தயாநிதி அழகிரி அஜித், ஷாலினி, அனோஷ்கா ஆகியோரை சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.

அவர் அருகில் இருக்கும்போது ஒரு அபார எனர்ஜி கிடைக்கிறது. இந்த மனிதரைப் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக உள்ளது.

இந்தத் துறையில் இருக்கும் இந்த இரண்டு சிறந்த நடிகர்களின் ஆற்றலுக்கு ஈடாக ஒரு நபர் கூட இருக்க முடியாது, ஒரு குடும்பமாக அவர்கள் வாழ்க்கையை மிகவும் அழகாக ஆக்குகிறார்கள்! உண்மையில் ஒரு சிறப்பான மாலைப்பொழுது” என்று தயாநிதி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

அஜித் 61 படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் நடிக்கிறார்.

ALSO READ:  சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

Related articles

Recent articles

spot_img