- அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை யாரும் கூறக்கூடாது என்று எங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம் என சென்னையில் இன்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார்.
அ.தி.மு.க. பாஜனதா தலைவர்கள் மாறி, மாறி விமர்சித்து வருவது தொடர்பாக அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது,
அ.தி.மு.க.வுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணி அரசியல் என்பதையும் தாண்டி தேசிய அளவிலான பிரச்சினைகளில் அவர்கள் எங்களோடு நிற்பவர்கள். பொன்னையன் தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து அ.தி.மு.க.வின் கருத்து என்பது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் தெரிவிப்பதுதான்.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார். அதற்காகதான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் அ.தி.மு.கவை அழித்து பா.ஜனதா வளர வேண்டிய அவசியமில்லை. தேசியத்திற்கு ஆதரவானவர்களும், திராவிட மாடல் என்ற ஏமாற்று வித்தையை நம்பாதவர்களும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இனிமேல் அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை யாரும் கூறக்கூடாது என்று எங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.
பா.ம.க. தலைவர் அன்புமணி மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜனதா தமிழகத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். மேகதாது அணைகட்டக்கூடாது என்று தஞ்சாவூரில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. அப்போது அன்புமணி எங்கே போனார். கருத்து எதுவும் சொல்லவில்லை . மேகதாது அணை கட்டியே தீர வேண்டும் என்று கர்நாடகத்தில் காங்கிரசார் பேரணி நடத்தினார்கள்.அப்போது இங்குள்ள காங்கிரசார் கண்டிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.






