செங்கோட்டை ராஜபாளையம் வழி இயங்கும்
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு வண்டிக்கு(06035/06036) தென்காசி, மானாமதுரை, பேராவூரணி, கருநாகப்பள்ளி(கேரளா) ஆகிய இரயில் நிலையங்களில் அடுத்த வாரம் 11.06.2022 சனிக்கிழமை முதல் இரு வழித்தடத்திலும் நிறுத்தம் வழங்கி இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செங்கோட்டை ராஜபாளையம் வழியாக, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு இரயில்(06035/06036) ஜூன் 4முதல் இயங்கி வரும் நிலையில் இந்த ரயிலுக்கு தென்காசி ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகங்கை நிறுத்தம் இல்லாதது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி யை ஏற்படுத்தியது.
ஸ்லீப்பர், 3அடுக்கு ஏ/சி, 2அடுக்கு ஏ/சி வகுப்புகள் உள்ளன.மத்திய கேரளா மற்றும் தமிழகத்தின் கிழக்கு டெல்டா மாவட்ட ஊர்களுக்கு நம் ஊர் வழியாக நேரடி இணைப்பு கிடைத்துள்ளது.இந்த விரைவு ரயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயங்குளம், சாஸ்தான்கோட்டை, கொல்லம், குந்தாரா, கொட்டாரக்கரை, புனலூர், தென்மலை, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ரயில்நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலுக்கு தென்காசி,ஶ்ரீவில்லிபுத்தூர் மானாமதுரை சிவகங்கை யில் நிறுத்தம் இல்லை என்பது ரயில் பயணிகளிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
3000 ச. கிமீ பரப்பளவு கொண்ட மாவட்டம்
,15 லட்சம் மக்கள் வசிக்கும் மாவட்ட
இதுவரை தென்காசியில் எந்த ஒரு ரயிலும் நிற்காமல் சென்ற வரலாறு இல்லை 60 சதவீதம் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம் இப்படி பல்வேறு சிறப்பு கொண்ட தென்காசியில் ஒரு சிறப்பு ரயில் நிற்காமல் சென்றதை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நேற்று ஜூன் 4 ம் தேதி முதல் துவங்கி ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை 10 சேவைகள் இயக்கப்பட இருக்கும், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி -எர்ணாகுளம் ரயில் தென்காசியில் நிற்காது.மேலும் இந்த ரயில் தமிழகத்தில் மிக பிரபலமான கோயில் நகரம் ஶ்ரீவில்லிபுத்தூர் சிவங்கையிலும் நிற்காது.இந்த ரயிலை தென்காசி ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகங்கை யில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தநிலையில் தென்காசி, மானாமதுரை, பேராவூரணி, கருநாகப்பள்ளி(கேரளா) ஆகிய இரயில் நிலையங்களில் அடுத்த வாரம் 11.06.2022 சனிக்கிழமை முதல் இரு வழித்தடத்திலும் நிறுத்தம் வழங்கி இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடையே மகிழ்ச்சி ஏற்படுத்திய நிலையில் ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல பல்வேறு தரப்பினரும் விரும்புகின்றனர்.ஶ்ரீவில்லிபுத்தூர் இந்தியாவில் பிரபலமான ஆன்மீக சுற்றுலா ஸ்தலமாகும்.






