1708427 fire vehicle 123 - 2026

டெல்லி மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ..

சற்றுமுன்

டெல்லி ஜாமியா நகரில் உள்ள மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு சுமார் 7 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து டெல்லி தீயணைப்பு சேவை இயக்குனர் அதுல் கர்க் கூறியதாவது,

தீ விபத்து ஏற்பட்ட வாகன நிறுத்துமிடத்திற்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் குறைந்தது 80 இ- ரிக்‌ஷாக்கள், அவற்றில் 30 புதியவை, 10 கார்கள், 2 ஸ்கூட்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறிப்படவில்லை என்றார்.

1708427 fire vehicle 123 - 2026
ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.