வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. பிற்பகல் 12.45 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றது. பின்னர் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இரவு 10.10 மணிக்கு நெல்லைக்கு வரும். இந்த ரெயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சென்றது.
வைகாசி விசாகம் ஸ்பெஷல்.
இன்று ஒரு நாள்(12-ஜூன்-22) மட்டும்.செங்கோட்டை -பழனி
ராஜபாளையம் வழி இயக்கப்படுகிறது.முருகப் பெருமானின் அவதார பெருநாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு இராஜபாளையம் வழியாக சிறப்பு இரயல் இயக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிறன்று(12-ஜூன்-2022), ஒருநாள் மட்டும் தற்காலிகமாக, செங்கோட்டை-மதுரை காலை நேர பயணிகள் இரயில்(06662) மதுரை வரை சென்று, மீண்டும் மதுரையில் இருந்து பழநி வரை இயக்கப்படும்.
மீண்டும் இதே வண்டி, மதியம் 02:45 மணிக்கு பழநியிலிருந்து புறப்பட்டு” மாலை 05:10 மணிக்கு மதுரை வந்தடையும். வழக்கம் போல் மாலை 05:15 மணிக்கு மதுரை-செங்கோட்டை வண்டியாக(06665) மதுரையிலிருந்து கிளம்பி “இரவு 07:03 மணிக்கு இராஜபாளையம் வந்து வஜக்கமான நேரத்தில் செங்கோட்டை சென்றடையும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.முருக பக்தர்கள் இந்த சிறப்பு இரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்
மேலும் பக்தர்களின் வசதிக்காக நெல்லை போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, ராஜபாளையம், ராமநாதபுரம், பரமகுடி, சங்கரன்கோவில், கழுகுமலை, தென்காசி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 155 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இவற்றில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.இதுபோல் செங்கோட்டை ராஜபாளையம் மதுரையில் இருந்து பழநிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.





