அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்க சென்னை நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
அ.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி, திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக்கூறி, பன்னீர்செல்வம், பழனிசாமி கூட்டாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கு இன்று(ஜூன் 16) விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழுவை நடத்துவதற்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என சூரியமூர்த்திக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.





