விருத்தாசலம் அருகே 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல்..

விருத்தாசலம் அருகே 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் பதுக்கி வைத்து ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி செய்வதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஐ.ஜி தினகரன் மேற்பார்வையில், கூடுதல் சூப்பிரண்டு மலைச்சாமி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் கடத்தல்காரர்களில் ஒருவனிடம் ‘எங்களுக்கு பழமையான சாமி சிலைகள் வேண்டும், கோடிக்கணக்கில் பணம் தரத் தயார்’ என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் பெயர், முகவரி மற்றும் விலாசத்தை கொடுத்து உள்ளார். தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் இருப்புகுறிச்சியை சேர்ந்த மகிமைதாஸ் என்பது தெரியவந்தது. அவரிடம் 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் விருத்தாச்சலம், பெரியகோட்டிமுளையை சேர்ந்த பச்சமுத்து என்பவர் ஐம்பொன் சிலைகளை கொடுத்து விற்பனை செய்ய சொன்னதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ஈரோடு, கொடுமுடியில் பதுங்கி இருந்த பச்சமுத்துவை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்து நடராஜர் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர் போலீசாரிடம் மேற்கண்ட சிலைகளை அரியலூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கொடுத்து விற்க சொன்னதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மதுரை சரக சிலை திருட்டு தடுப்பு தனிப்படை போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மதுரை கோவிலில் இருந்து கடத்தப்பட்டதா? எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1718431 statue - 2026
மீட்கப்பட்ட சாமி சிலைகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories