சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு..

1752159 vinayagar - 2026

சென்னையில் இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளனர். சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான சிலைகளை வைத்து பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளனர். சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான சிலைகளை வைத்து பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட உள்ளன. இதையடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாடுவது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் இந்து முன்னணி சார்பில் மேகநாதன், தங்கராஜ், பாரத் இந்து முன்னணி சார்பில் பிரபு, டில்லிபாபு, அருண், விஸ்வ இந்து பரிசத் சார்பில் ரவிராஜ், இந்து மக்கள் கட்சி சார்பில் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் போலீஸ் சார்பில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை விழா கமிட்டியினர் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தங்களது பகுதியைச் சேர்ந்த இந்து இயக்க பிரமுகர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 10 இடங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 31-ந்தேதி பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகளை 4-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளையும் போலீசார் வகுத்துள்ளனர். இதனை முழுமையாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை மாநகர போலீசார் விரிவான அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories