கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் இன்று விலை உயர்வு..

Published:

801442 - 2026

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று சற்று ஏற்றுத்துடன் தொடங்கியுள்ளது.இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,736-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் அதிகரித்து  ரூ.58.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,722 ஆகவும், சவரன், ரூ.37,776 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,736ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ரூ.37,888ஆக ஏற்றம் கண்டுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்தது. கடந்த திங்கள்கிழமை கிராம் ரூ.4,765ல் தொடங்கியது. இன்று வாரத்தின் கடைசி நாளில் ரூ.4,722 ஆகக் குறைந்துள்ளது. ஏறக்குறைய கிராமுக்கு, 43 ரூபாய் குறைந்தது. சவரனுக்கு, 344 ரூபாய் குறைந்தது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்களுக்குப்பின், தங்கம் விலை சவரன் ரூ.38ஆயிரத்துக்கு கீழ் சரிந்தது. இந்நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை கிராமுக்கு 14 உயர்ந்து, சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது. தற்போதும் சவரன் 37ஆயிரம் ரூபாய்க்குள் இருப்பதால், இந்த வாரத்தில் விலை ஏறி மீண்டும் ரூ.38ஆயிரத்தை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசு அதிகரித்து, ரூ.58.50ஆகவும், கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.58,500 ஆகவும் அதிகரித்துள்ளது. கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,736 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img