வனப்பகுதியில் காட்டுத்தீ சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தொடரும் தடை..

IMG 20221007 WA0008 - 2026
IMG 20221007 WA0007 - 2026

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கோயிலுக்கு செல்ல மலையேற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாணிப்பாறைக்கு மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உட்பட்ட பீட் நம்பர் 4 வல்லாளம்பாறை பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. தீயால் பலவகை அரிய மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

IMG 20221007 WA0015 - 2026

ஆனால் அப்பகுதியில் அதிகமாக காற்று வீசியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே 2-வது நாளாக நேற்று இரவும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

மேலும் மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மலையில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் தீவிர சோதனையும் நடத்தினர். பக்தர்கள் செல்ல தடை இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு இன்று வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் வனப்பகுதியில் பற்றிய காட்டு தீயை அணைத்தால் மட்டுமே நாளை மறுநாள்‌அக்9-ந் தேதி நடைபெற உள்ள பௌர்ணமி பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், தீ அணையாத பட்சத்தில் பவுர்ணமிக்கும் தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் தடை செய்யப்பட்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

IMG 20221007 WA0017 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories