சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 13 மையங்களில் உடனடி முன்பதிவு வசதி..

Published:

Tamil News large 3023548 - 2026
1786769 dsc0989 - 2026

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 13 மையங்களில் உடனடி முன்பதிவு வசதி கொரோனா சான்றிதழ் தேவையில்லை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்த கோபன் நாகர்கோவி லில் இன்று நிருபர்களிடம் கூறியுள்ளார்:-

அவர் மேலும் கூறுகையில் சபரிமலை மண்டல மகரவிளக்கு யாத்திரை நவம்பர் 16-ந்தேதி மாலை தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 17-ந்தேதி முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. டிசம்பர் 27 -ந்தேதி இரவு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை நடை திறக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். மகரவிளக்கு ஜனவரி 14-ந்தேதி நடக்கிறது. சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் கேரள மாநில அரசு, தேவசம் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணைந்து ஆன்லைன் முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இதுதவிர 13 மையங்களில் உடனடி முன் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் ஸ்ரீகண்டேஸ்வரம் சிவன் கோவில், கொல்லத்தில் கொட்டாரக்கரா மகாகணபதி கோவில், பத்தனம்திட்டாவில் நிலக்கல் அடிப்படை முகாம், பந்தளம் தர்ம சாஸ்தா கோவில், ஆலப்புழாவில் செங்கனூர் ரெயில் நிலையம், கோட்டயத்தில் எருமேலி கோவில், எட்டூமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், எர்ணாகுளத்தில் பெரும்பாவூர், கீழில்லம், இடுக்கியில் குமுளி, மூழிக்கல், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் தரிசனம் செய்வதற்கு பதிவு செய்யலாம்.

சபரிமலை தரிசனத்துக்கான பக்தர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை. தரிசனத்திற்கு வரும் அனைத்து அய்யப்ப பக்தர்களும் தங்கள் அசல் ஆதார் அட்டையை சரிபார்ப்புக்காக எடுத்துச்செல்ல வேண்டும். அய்யப்ப பக்தர்களுக்கு எந்தவிதமான கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை.

சபரிமலை செல்லும் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் பயோ டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் மருத்துவம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்துள்ளது. சன்னிதானத்தில் அய்யப்ப பக்தர்கள் ஓய்வெடுக்கவும், இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்து உள்ளோம். அப்பம், அரவணை, அபிஷேகம், நெய் போன்ற பிரசாதங்கள் வழங்க சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மண்டல மகரவிளக்கு விழாவையொட்டி சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் சிறப்பு தேவசம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

பம்பை நதி மற்றும் சபரிமலை செல்லும் வனப்பாதையில் உள்ள நீராடல் படிகளில் தேவையான மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை ஆற்றின் ஆழம் குறித்த அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மண்டல மகரவிளக்கு யாத்திரையில் கொரோனா சூழலுக்கு பிறகு முதன்முறையாக வனப்பாதை புல்மேடு மற்றும் எருமேலி, அழுதா, கரிமலை பாதை பக்தர்களுக்காக திறக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த வழியில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு வசதிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்யும். இந்த காட்டு வழி பகுதிகளில் ஷெட் மற்றும் இளைப்பாறும் வசதியையும் தேவசம் போர்டு ஏற்பாடு செய்யும். பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தெற்கு ரெயில்வே மூலம் தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.

நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து சேவை இயங்கும். இதற்காக 200 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் கேரளா போக்குவரத்து கழகம் சார்பில் 300 பஸ்களை பயன்படுத்தி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பம்பைக்கு இயக்கப்படுகிறது.உடல் ஊனமுற்ற பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும். பல்வேறு பகுதிகளில் உள்ள அய்யப்ப பக்தர்கள் குழுவிற்கு விருப்பமுள்ளவர்களுக்கு சிறப்பு சேவையை கேரளா அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. முன்பதிவு முறையை பக்தர்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img