மதுரை: மதுரை முனிச்சாலையில் , மதுரை நகர் தெற்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி திட்டத்தில் வீடு கட்டுகின்ற ஏழைத் தொழிலாளியை மிரட்டிய 42 வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகத்தை கைது செய்ய கோரி, மாநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
ஆர்ப்பாட்டத்தில், மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயவேல், குமார், வினோத்குமார்பொதுச்செயலாளர் பாலமுருகன், மாவட்ட கூட்டுறவு பிரிவு துணைத்தலைவர் முருகேசன், மண்டல் தலைவர் அருண்குமார், மண்டல் பொதுச்செயலாளர் ராம்தாஸ், துணைத்தலைவர் ராஜீவ்காந்தி,வார்டு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்..