மதுரையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயன் ரத்து செய்யப்பட்டுள்ளது:
மதுரை: இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு மாலை 3.00 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மதுரை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 56 பயணிகள் மதுரை வந்தடைந்தனர்.
பின்னர், மதுரையிலிருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பின்னர் 4:20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் 120 பயணியுடன் புறப்பட தயாரான போது, விமான இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் விமான நிறுவன அதிகாரிகள் விமானத்தில் உள்ள இயந்திர தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய திருச்சியில் இருந்து உபகரணங்களை கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, விமானம் சரி செய்து நாளை புறப்படும் அதுவரை விமானத்தில் பயணம் செய்ய தயாராக உள்ள 120 பயணிகள் தனியார் ஹோட்டல்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, ஸ்ரீலங்கன் விமான நிறுவன அதிகாரிகள் கூறினர்.