திருமலை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் டிச 12ல் ஆன்லைனில் வெளியீடு..

FB IMG 1670581664434 - 2026

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வரும் 12ம்தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வரும் 12ம்தேதி மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல், எலக்ட்ரானிக் குலுக்கலில் கலந்து கொள்ள சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளுக்கு 12ம்தேதி காலை 10 மணி முதல் 14ம்தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் தங்கள் ஆதார் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். 14ம்தேதி மதியம் 12 மணிக்கு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இந்த தகவல் பெற்றவர்கள் 2 நாட்களுக்குள் டிக்ெகட்டுகளை ஆன்லைனில் பணம் செலுத்தி பெறலாம். ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு மற்றும் 2ம்தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதனால் 11 நாட்கள் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம்தேதி முதல் 31ம்தேதி வரையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தாங்கள் விரும்பும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஐபி டிக்கெட் விற்றவர் கைது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 6 பேர் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் இந்த டிக்கெட்டுகளை ரூ.18 ஆயிரத்திற்கு வாங்கி வந்தது தெரிய வந்தது. அவை போலி என்பதும், திருமலையில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த ஹரி என்பவர், நந்திகம எம்எல்ஏவின் சிபாரிசு கடிதத்தின் பேரில் 6 விஐபி தரிசன டிக்கெட்டுகளை ரூ.18 ஆயிரத்துக்கு விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து ஹரியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories