கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை..

images 68 - 2026

கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெற்று வருகிறது.

கொரோனா அறிகுறிகளோடு வரும் நபரை பரிசோதித்து அனுமதி அளிப்பது குறித்து ஒத்திகை பார்க்கப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். சீனா, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

பிஎஃப்-7 வகை தொற்று பரவுவதால், அதனை எதிர்கொள்ள நாடு முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் தயார்நிலை குறித்த ஒத்திகை தொடங்கியது. இதில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் ஆக்சிஜன் இருப்பு, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்யப்பட உள்ளது.

மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவற்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை விடப்படும், வரும் 31-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதிவரை இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது எனவும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

நாட்டில் கொரோனா பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்த கவனமாக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரித்தால் அதை எதிர்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது. மக்கள் சரியான சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதற்காக தான் இன்று நாட்டில் உள்ள கொரோனா மருத்துவமனைகளில் அவசரகால ஒத்திகை நடத்தப்படுகின்றன என கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories