ராஜபாளையம் அருகே சீனாவில் இருந்து வந்த தாய் மகளுக்கு கொரோனா..

IMG 20221228 WA0056 - 2026

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வத்றாப் பகுதியில் சீனாவில் இருந்து வந்த தாய் , மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி துணை இயக்குனர் ஆய்வு செய்தார்,கொரோனா பாதித்தவர்களின் உறவினர்களிடமும் பரிசோதனை செய்யப்பட்டது.

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 9:40 மணியளவில் இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகள் வந்தனர். அவர்களுள், சீனாவில் இருந்து இலங்கை மூலம் மதுரை வந்த பயணிகளிடம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 6 வயது மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவரது கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் மனைவி மற்றும் மகள் தங்கியிருந்துள்ளனர். வேலையை முன்னிட்டு சுப்பிரமணியம் ஜெர்மனி சென்ற நிலையில், மனைவி மற்றும் மகள் தமிழகம் திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து, இருவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களது ஊரான இளந்தைகுளம் கிராமத்தில் அவர்களது வீட்டில் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி துணை இயக்குனர் கழுசிவலிங்கம் தலைமையில் மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் வேறு ஏதும் தொந்தரவு இருக்கிறதா என்று விசாரணை நடத்திய நிலையில் கொரோனா பாதித்தவர்களின் உறவினர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் சிவகாசி துணை இயக்குனர் கழுசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களுக்கு உருமாறிய பிஎஃப்7 கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய தாய் மற்றும் மகளின் பரிசோதனை மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories