மின் இணைப்புடன்  ஆதாா்: கால அவகாசம் ஜன31வரை நீட்டிப்பு..

images 24 2 - 2026

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

அதேவேளையில், மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்த்து, இந்த ஒரு மாத காலத்துக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்துவிட வேண்டாம் என்றும், ஜனவரி 31ஆம் தேதிக்குப் பிறகு அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார்.

இன்றுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், சுமார் 1.61 கோடி போ் மட்டுமே ஆதாா் எண்ணை இணைத்திருக்கும் நிலையில் கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை அதாவது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனீட்டாளா்கள் உள்ளனா். அவா்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரையும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை இரண்டு வழிகளில் இணைக்கலாம் என்றும், தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளம் வழியாகவோ அல்லது மாநிலத்தில் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் வழியாகவோ இணைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இதுவரை சுமாா் 1.61 கோடி மின் இணைப்புகள் மட்டுமே, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நாளை புத்தாண்டு தினம் என்பதால், சிறப்பு முகாம் நடைபெறாது என்றும், மொத்தமாக இதுவரை 1.61 கோடி மின் இணைப்புகளுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை டிச. 31-க்குள் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் பயனீட்டாளா்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டியுள்ளது.எனவே, இதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாத காலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories