இராஜபாளையத்தில் இரண்டு பட்டாசு ஆலைகளுக்கு இன்று சீல் வைத்து வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
சிவகாசியில் நேற்று பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் பட்டாசு ஆலையில் ஆய்வு இராஜபாளையத்தில் இரண்டு பட்டாசு ஆலைகள் சீல் வைப்பு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பட்டாசு ஆலைகள் குறித்து கணக்கெடுத்து உரிய அனுமதி இல்லாமல் செயல்படக்கூடிய பட்டாசு ஆலைகள் விதி மீறல்களில் ஈடுபடக் கூடிய பட்டாசு ஆலைகளை கணக்கெடுக்க வருவாய் துறையினர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் பேரில் இராஜபாளையத்தில் முடங்கியார் சாலையில் உள்ள சம்மந்தபுரம் கிராமத்திற்கு உட்பட்ட சிவசக்தி ஃபயர் ஒர்க்ஸ் மற்றும் எம் பி கே புதுப்பட்டி அருகே கொத்தங்குளம் கிராமத்திற்கு உட்பட்ட ஜெயலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் இரண்டிலும் இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் .மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் இரண்டு பட்டா சாலைகளிலும் அரசு உத்தரவை மீறி விதிமுறைகளில்
ஈடுபட்ட வந்தது.
நேற்று சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிகு விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் பலியாகி 17 பேர் படுகாயம் அடைந்த நிலையில் இன்று அனைத்து பட்டாசு ஆலைகளும் செயல்படாமல் இருந்த நிலையில் இராஜபாளையத்தில் இரண்டு ஆலைகள்லும் தொழிலாளர்களை வைத்து பட்டாசு தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்த நிலையில் ஆய்வு செய்து இரண்டு பட்டாசு ஆலைக்கும் சீல் வைத்தனர்.