2023-24 மத்திய பட்ஜெட் வாசித்தபோது இந்தியப் பொருளாதாரம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் 7 அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 220 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. பிரதமர் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிக்கபெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம்.
அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம். தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ரூ1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சேவை உள்ளிட்ட 7 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்பு, திறன் பயன்பாடு, பசுமை வளர்ச்சி இளைஞர்நலன் உள்ளிட்ட 7 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சுற்றுலாவை ஊக்குவிக்க மாநிலங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேளாண் துறையில் புத்தாக்க தொழில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் துறையில் புத்தாக்க தொழில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கூட்டறவு சங்கம் உள்ள நிலை ஏற்படுத்தப்படும். “குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்” விவசாயத்துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும் வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு” 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும் .”மேலும் ஓராண்டுக்கு அந்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை” கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளத்துக்கு முன்னுரிமை அளித்து, விவசாய கடன் இலக்கு ரூ20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
ஒருங்கிணைந்த வளர்ச்சி கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்தலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.என பட்ஜெட்டில் முக்கிய சரத்துக்களாக உள்ளது.
பட்ஜெட் உரையில் இந்தியப் பொருளாதாரம் உலகில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அவர்மேலும் பேசியபோது,
2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்துள்ளது. தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த 9 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் உலகில் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சுதந்திர இந்தியாவின் 75-ப்வது ஆண்டில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா விளங்குகிறது. இந்தியப் பொருளாதாரம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது .விவசாயிகள், இளைஞர்கள், இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட் இதுவாகும்.
இந்தியா பொருளாதாரம் சிறப்பாக இருப்பதை உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன. நடப்பாண்டில் இந்தியா 7 சதவிகித பொருளாதார வளர்ச்சியை காணும். மற்ற நாடுகளை விட இது அதிகம். கடந்த பட்ஜெட்டுகள் அமைத்த அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட் ஆக இது அமையும். உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், ஜி20 தலைமையை இந்தியா ஏற்றது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியப் பொருளாதாரம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது. பெண்கள், குழந்தைகள், பட்டியலின மக்களின் முன்னேற்றத்தை அடிப்டையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் யாரும் பசியில்லாத நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியது .உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்திய பொருளாதாரம் உள்ளது என பேசியுள்ளார் நிர்மலா சீதாராமன்.
5-வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் 6-வது நிதி மந்திரியாக தற்போது நிர்மலா சீதாராமன் இடம் பெற்றுள்ளார்.
மனமோகன சிங், அருண் ஜெட்லி மற்றும் சிதம்பரம் போனறவர்களை தொடர்ந்து, ஐந்து முறை தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் சுதந்திர இந்தியாவின் 6-வது நிதி மந்திரியாகிறார் நிர்மலா சீதாராமன். நிர்மலா சீதாராமன் தற்போது தாக்கல் செய்துள்ள 2023ஆம் ஆண்டின் பொது பட்ஜெட்டானது, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாகும். முன்னாள் மத்திய நிதியமைச்சர்கள், அருண் ஜெட்லி, ப சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோர் ஐந்து முறை வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பித்த மற்ற மந்திரிகள் ஆவர்.
முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.