
ஆளும் பாஜக, இடது-காங்கிரஸ் கூட்டணி மற்றும் பிராந்தியக் கட்சியான திப்ரா மோதா இடையே மும்முனைப் போட்டி நிலவிய திரிபுராவில், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் வியாழக்கிழமை 86.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயாவுடன் மார்ச் 2 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 2018 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 89.38 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
திரிபுராவில் 60 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கான தேர்தல் வியாழக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 51.35% வாக்குகளும் பிற்பகல் 3 மணி வரை 69.96 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்தன. மாலையில் ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டு 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 66.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
திரிபுரா மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28.13 லட்சம். இவா்கள் வாக்களிக்க வசதியாக 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்து
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் மிசோரமில் இருந்து திரிபுராவிற்கு குடிபெயர்ந்த புரு சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள், முதல் முறையாக தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தனர். திரிபுராவின் தலாய் மாவட்டத்தின் 47 அம்பாசா சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஹடுக்லௌபாரா வாக்குச் சாவடியில் புலம்பெயர்ந்தோர் அதிக அளவில் வந்திருந்தனர்.
வியாழக்கிழமை பதிவான வாக்குகள், மாா்ச் 2-இல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.





