
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற குடவரைக்கோயிலான மூவரைவென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் பகுதியில் வியாழக்கிழமை இரவு திடீர் தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரைவென்றான் கிராமத்தில் பிரிசித்தி பெற்ற மலைக்கொழுந்தீஸ்வரர் குடைவரை கோயில் உள்ளது. இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த குடைவரை கோயில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது. இந்த மலைக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது.
இந்த குடைவரை கோயில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடன் வத்திராயிருப்பு தீயணைப்ப துறையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த தீ விபத்தில் கோயிலுக்கு ஏதும் சேதம் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இதனால் பக்தர்கள் நிம்மதியைத் தனுர்.




