அப்பாட..முடிவுக்கு வந்த பிரச்சினை – மீனவர் ராஜாவின் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம்..

mcms 6 - 2026

கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில், மர்மமான முறையில் இறந்த மீனவர் ராஜாவின் உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது மனைவிக்கு தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளர் பணியை வழங்கியுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் கோவிந்தபாடி பகுதியை சேர்ந்தவர் காரவடையான் (எ) ராஜா (39). மீன் பிடி தொழிலாளியான இவர், அவ்வப்போது தனது நண்பர்களுடன் வேட்டைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 14ம் தேதி ராஜா, தனது நண்பர்களான ரவி, இளையபெருமாள் ஆகியோருடன் பரிசலில் அடிபாலாறு பகுதிக்கு சென்று வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ரவி, இளையபெருமாள் தப்பி வந்தனர். ராஜா மாயமானார். இந்நிலையில் 3வது நாளில் ஈரோடு வனப்பகுதிக்கு உட்பட்ட சென்னகிரி பாலாறு பகுதியில் ராஜாவின் சடலம் மீட்கப்பட்டது. இதுபற்றி ஈரோடு பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாவின் உயிரிழப்புக்கு காரணமான கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி பவுனா மற்றும் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதனால், பிரேதப்பரிசோதனை செய்வததில் தாமதம் ஏற்பட்டது.

மீனவர் ராஜா சாவு குறித்து சேலம் ஆர்டிஓ விஷ்ணுவர்த்தினி விசாரணை நடத்தினார். இதனால் பிரேதப்பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.

பின்னர், உடலை மருத்துவர் கோகுலரமணன் தலைமையிலான குழுவினர் பிரேதப்பரிசோதனை செய்தனர். அதில், உடலில் துப்பாக்கி குண்டு துளைத்தற்கான அறிகுறி தென்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் நேற்றிரவு சடலத்தை வாங்க மறுத்து, மனைவி மற்றும் உறவினர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமாரிடம் ராஜாவின் உறவினர்கள் பேசினர். அதில், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதாக தெரிவித்தனர். உடனே கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம், மாவட்ட செயலாளர் ராஜசேகர், தமிழ்குமரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அதில், உயிரிழந்த ராஜாவின் உடலை பெற்றுச் சென்று அடக்கம் செய்கிறோம் என மனைவி பவுனா மற்றும் உறவினர்கள் கூறினர்.

அப்போது மாவட்ட எஸ்பி சிவக்குமார், கருணையின் அடிப்படையில் ராஜாவின் மனைவி பவுனாவிற்கு கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளர் வேலை வழங்குவதாக கூறி பள்ளி நிர்வாகிகளுடன் ஆணையை வழங்கினார்.

இதையடுத்து இன்று காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு ராஜாவின் உறவினர்கள் வந்தனர். அவர்களிடம், ஈரோடு பர்கூர் போலீசார், ராஜாவின் உடலை ஒப்படைத்தனர். உடனே மேட்டூருக்கு உடலை எடுத்துச் சென்றனர். அங்கு சொந்தகிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அவரது சடலம் கோவிந்தாபாடி மயானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தற்போது அடக்கம் செய்யப்பட்டது.

கருணை அடிப்படையில் ராஜாவின் மனைவி பௌனாவிற்கு கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் குழந்தைகள் பராமரிப்பு பணி வழங்கியதற்கான ஆணையை சேலம் காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் ஏற்கனவே வழங்கி உள்ளார்.
மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.மேலும், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் மற்றும் தமிழ்குமரன் சார்பில் ராஜாவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories