December 6, 2025, 6:55 PM
26.8 C
Chennai

இன்று சோதனை ஓட்டம் கண்ட சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில்

இன்று சோதனை ஓட்டம் கண்ட

images 100 - 2025
#image_title
சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 5 மணி 40 நிமிடத்தில் சென்றடைந்துள்ளது

வந்தே பாரத் ரெயிலின் 12-வது தயாரிப்பு சென்ட்ரல்-கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலாகும்.

சென்ட்ரல்-கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரெயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் 12-வது தயாரிப்பு சென்ட்ரல்-கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலாகும். 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் முக்கிய நகரங்களில் இயக்கப்படுகிறது.

ஆனால் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளுடன் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த வழி தடத்தில் சதாப்தி, இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாலும் 16 பெட்டிகள் இயக்கினால் காலியாக ஓடும் என்பதாலும் 8 பெட்டிகளாக குறைத்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரெயில் பெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள நிலையில் இன்று சோதனை ஓட்டம் மேற் கொள்ளப்பட்டது.

சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் அதிகாரிகள் தொழில்நுட்ப வல்லுனர்கள் இருந்தனர். 8 பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று சென்றது.

130 கி.மீ. வேகத்திற்கு இந்த ரெயிலை இயக்க முடியும் என்றாலும் அதைவிட குறைந்த வேகத்திலேயே இயக்கி சோதனை செய்யப் பட்டது. மற்ற ரெயில்களை விட குறைவான நிறுத்தம், வேகம் அதிகரிப்பு காரணமாக வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 6½ மணி நேரமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் சரியாக காலை 11.20 மணிக்கு கோவை சென்றடைந்தது. 5 மணி 40 நிமி டத்தில் ரெயில் கோவையை அடைந்தது. இதன்மூலம் ரெயில் சோதனை ஓட்டம் திட்டமிட்டப்படி நடந்துள்ளது.

பிற்பகல் கோவையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் இரவு 8 மணிக்கு முன்னதாக சென்ட்ரல் வந்து சேருகிறது. வாரத்தில் ஒரு நாள் தவிர 6 நாட்கள் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

சோதனை ஓட்டத்தின் போது ஏதாவது தொழில் நுட்ப கோளாறு, பிரச்சினை ஏற்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories