
மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் அதிரடி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், இந்த மனு மீதான தீர்ப்பை கடந்த மாதம் 22-ந்தேதி ஒத்திவைத்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போல் மக்கள் நலப்பணியாளர்கள் திட்டமும் தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பணி நீக்கம் செய்யபப்ட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேரும் மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





