பஞ்சாப்  ராணுவ முகாம் தாக்குதலில் நடந்தது என்ன? – தீவிர விசாரணை

1232844 army 1 - 2026
#image_title

 பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் போலீசார் ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் துறை தரப்பில் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய ராணுவத்தின் தெற்கு கமாண்ட் கூறியதாவது: “ராணுவ தளவாடங்கள் பிரிவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

இது துரதிர்ஷ்டமான சம்பவம். 4 பேர் பலியானதைத் தாண்டி வேறு ஏதும் சம்பவம் நடைபெறவில்லை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னால் INSAS ரைஃபிள் மற்றும் 28 தோட்டாக்கள் தொலைந்துபோன நிலையில் அதற்கும் இன்றைய சம்பவத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் தீவிரம் அறிந்து இது குறித்து எவ்வித வதந்திகளையும் யாரும் பரப்ப வேண்டாம், ஊடகங்கள் ஊகங்களின் அடிப்படையில் எந்தச் செய்தியும் பரப்பிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதனை உறுதி செய்து ராணுவத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு தாக்குதல் நடைபெற்றது.

உடனடியாக பட்டிண்டா ராணுவ முகாமின் அதிரடி தாக்குதல் குழுக்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டன.

இதில் 4 பேர் உயிரிழந்தனர். ராணுவ முகாம் முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ராணுவ முகாமின் அனைத்து வாயிற்கதவுகளும் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனைக்குப் பின்னரே மேலதிக விவரங்களை தெரிவிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், ராணுவ முகாமில் நடந்தது தீவிரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.

பட்டிண்டா மூத்த காவல் கண்காணிப்பாளர் குரானா கூறுகையில், “பஞ்சாப் காவல் துறை பட்டிண்டா ராணுவ முகாமுக்கு வெளியில் தயார் நிலையில் நிற்கிறது. ஆனால், ராணுவத் தரப்பில் உள்ளே நுழைய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories