பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு..

1500x900 1235319 modione33 4 - 2026
#image_title

பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.தமிழக கவர்னர் உட்பட பலரும் கேட்டனர்.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் (மன் கி பாத்) என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி முதல் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக ரேடியோவில் பேசி வருகிறார். தனது உரையின்போது அந்த மாதம் நடைபெறும் நிகழ்வுகள், சாதனைகள், தனி நபரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாட்டு மக்களிடம் அவர் பகிர்ந்து கொள்வார்.

மேலும் மனதின் குரல் குறித்து நாட்டு மக்களிடம் கருத்துக்களையும் கேட்டு அதற்கு ஏற்ற வகையிலும் உரையாடி வருகிறார். பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அவரது வானொலி உரையை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: மனதின் குரல் நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிகழ்வும் அடுத்த நிகழ்விற்கான அடித்தளமாக அமைகிறது. பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலூர் நாக நதியை மீட்டெடுத்தனர். தமிழகத்தை சேர்ந்த பழங்குடியின பெண்கள் டெரகோட்டா கப்களை ஏற்றுமதி செய்தனர். வேலூரில் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து நாக நதியை தூர்வாரி சீரமைத்தது பெருமைக்குரியது.

வெளிநாடு சுற்றுலா செல்லும்முன் இந்தியாவில் 15 இடங்களுக்காவது நாம் சுற்றுலா சென்றிருக்க வேண்டும். நாட்டில் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இயற்கை வளங்களான ஆறுகள், மலைகள் குளங்கள் உள்ளிட்டவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு நடந்தது.

500x300 1874249 tngovernor - 2026
#image_title

கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இதற்காக பிரம்மாண்ட சிறப்பு எல்.இ.டி திரையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தமிழில் ஒலிபரப்பப்பட்டது.

இதில் முக்கிய பிரமுகர்கள், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீஸ் அதிகாரி நடராஜ், ஐசரி கணேஷ், உள்பட 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories