ராஜபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கல்!

mariamman temple pookkuzhi - 2026
#image_title

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் – தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பூக்குழி திருவிழா அதிவிமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டிற்கான சித்திரை பூக்குழி திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்று வந்தது.

தினமும் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. அதனையடுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பூக்குழி திடலில் தீ வளர்க்கப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்பு, காப்புகட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி என கோஷமிட்டபடி பூக்குழி இறங்கினர். இதில் பல பக்தர்கள் அலகு குத்தியும், அக்கினிச்சட்டி ஏந்தியும், சில பக்தர்கள் குழந்தைகளை சுமந்தபடியும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சித்திரை பூக்குழி திருவிழாவில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள் என்று கோவில் நிர்வாகிகள் கூறினர். பக்தர்கள் பூக்குழி இறங்குவதை பார்ப்பதற்காக ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

சித்திரை பூக்குழி திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories