சுற்றுலா பயணிகளை கவர்ந்த கோத்தகிரி காய்கறி கண்காட்சி

images 42 - 2026
#image_title

கோத்தகிரியில் இரு நாள் காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. 5 டன் காய்கறிகளாலான டிராகன், முதலை, யானை குடும்பம், சோளம், கம்பு அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

நீலகிரி மாவட்டத்தில்‌ ஆண்டுதோறும் கோடை சீசனில் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி என பல்வேறு விதமான கண்காட்சிகள்‌ நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்வாக, கோத்தகிரி நேரு பூங்காவில்‌ 12-வது காய்கறி கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

images 43 - 2026
#image_title

சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களின்‌ காய்கறி வளங்களை பறைசாற்றும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தாண்டு சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறு தானியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுமார்‌ ஒன்றரை டன் அளவில்‌ உருளைக்கிழங்கினால்‌ ஆன கம்பு செடி, குடை மிளகாய் மற்றும் பஜ்ஜி மிளகாயினால்‌ ஆன மக்காச்சோளம்‌ மெகா உருவங்களாக அமைக்கப்பட்டிருந்தன.

மேலும்‌, காய்கறிகளால் யானை குடும்பம்‌, டிராகன்‌, முதலை, லிங்கம், வரையாடு, ஒட்டகச் சிவிங்கி, இருவாச்சி பறவை, வள்ளுவர் கோட்டம், கரடி போன்ற உருவங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

986679 - 2026
#image_title

உதகையின்‌ 200-வது ஆண்டை போற்றும்‌ வகையில்‌ ‘ஊட்டி 200’ சின்னம்‌ பல்வேறு காய்கறிகளினால்‌ அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், எஸ்ஏடிபி திட்ட இயக்குநர் மோனிகா ராணா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்புசாமி, கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கண்காட்சி இன்றும் நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories