சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது தீ-ஒருவர் மரணம்..

991587 - 2026
சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது தீ-

சாத்தூர் அருகே பட்டாசுக் கடையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது இன்று பிற்பகல் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பட்டாசுக் கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் இரு பைக்குகளும் தீப்பற்றி எரிந்தன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து (40). அப்பகுதியில் சொந்தமாக பட்டாசுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பட்டாசுக் கடையின் பின்பகுதியில் சட்ட விரோதமாக செட் அமைத்து பட்டாசு தயாரித்தும், அதை பேக்கிங் செய்தும் வந்துள்ளனர். வழக்கம்போல் இன்றும் பட்டாசு கடையின் பின்பகுதியில் பட்டாசு தயாரித்துள்ளனர். அப்போது, மருந்து உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசுக் கடையிலிருந்த பட்டாசுகள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரமாக வெடித்துச் சிதறின. பட்டாசுக் கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் இரு பைக்குகளும் தீப்பற்றி எரிந்தன.

தகவறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால், தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததால் கடையின் அருகே சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பட்டாசுகள் வெடித்து முடித்த பின்னரே, தீயணைப்பு வீரர்களும், போலீஸாரும் மீட்புப் பணியைத் தொடங்கினர். அப்போது, பட்டாசு அங்கிருந்து தீயில் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையில் அவர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) என்பது தெரியவந்தது.

அதையடுத்து, அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories