images 2023 03 05T085805716 - 2026

ஆபரண தங்கம்- விலை சவரனுக்கு ரூ.200 குறைவு..

சற்றுமுன்
images 2023 03 05T085805716 - 2026
#image_title

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 19) சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.45,000-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் மே.3 ஆம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.728 உயர்ந்தது. தொடர்ந்து மறுநாள் சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. கடந்த சில நாட்களாக தங்கம் எந்தவித மாற்றமுமின்றி ஒரே விலையில் தொடர்ந்து வந்தது.

இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,625-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.45,000-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,736 -க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,000-ஆக இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.