
விருதுநகர் மாவட்டத்தில் சிறுமியின் கையை பிடித்து இழுத்த தாகக் கூறி முதியவரை கட்டிப்போட்டு அடுத்த ஊர் பொதுமக்கள்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த நீராவிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி தன்னுடைய தோழிகளுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சிறுமியின் கையை பிடித்து இழுத்துள்ளார். உடனடியாக பயந்து போன சிறுமி கத்தி கூச்சலிட்டு உள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்து ஓடி வந்த பொதுமக்கள் அந்த முதியவரை கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அந்த முதியவருக்கு விருதுநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.