
அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மைய அறிவிப்பின் படி…
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும். அதிகபட்சம் 36 டிகிரிசெல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
தமிழக தெற்கு கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரி கடல், இலங்கை கடலோரம், தமிழக வடக்கு கடலோரம் உள்ளிட்ட பகுதிகளில், மணிக்கு 65 கிமீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுகிறது. லட்சத்தீவுகள், கேரள கடலோரம் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளிலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், மணிக்கு 55 கிமீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுகிறது. எனவே, மீனவர்கள் இன்றும், நாளையும் இப்பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 03.07.2023 காலை 0830 மணி முதல் 04.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சின்னக்கள்லார் (கோவை) 13
சின்கோனா (கோவை) 11
வால்பாறை PTO (கோவை), பரூர் (கிருஷ்ணகிரி) தலா 8
சோலையார் (கோவை), ஏற்காடு (சேலம்) தலா 7
பார்வூட் (நீலகிரி) 6
வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), நாலுமுக்கு (திருநெல்வேலி), மே மாத்தூர் (கடலூர்), ஊத்தங்கரை, நெடுங்கல், பாம்பார் அணை (கிருஷ்ணகிரி) தலா 5
ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), தேக்கடி, பெரியாறு (தேனி), குண்டார் அணை, அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி), தேவாலா (நீலகிரி) தலா 4
கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), செஞ்சி (விழுப்புரம்), DSCL கலயநல்லூர், BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ஆட்சியர் அலுவலகம், கடலூர் (கடலூர்), செங்கோட்டை (தென்காசி), மாஞ்சோலை, ஊத்து (திருநெல்வேலி), சிவலோகம், சித்தார் (கன்னியாகுமரி), கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி) தலா 3
ஹரூர் (தர்மபுரி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), போளூர், தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), DSCL தியாகதுர்கம், KCS மில்-1 கடவனூர், DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), புதுச்சேரி (புதுச்சேரி), குடிதாங்கி, பண்ருட்டி, வானமாதேவி (கடலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), பெரியகுளம் AWS (தேனி), நடுவட்டம், அவலாஞ்சி, மேல் பவானி, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), டேனிஷ்பேட்டை, கரியகோவில் அணை (சேலம்), மங்களபுரம் (நாமக்கல்), பேச்சிப்பாறை, பாலமோர் (கன்னியாகுமரி) தலா 2
தருமபுரி PTO (தர்மபுரி), தளி (கிருஷ்ணகிரி), ஆம்பூர், வடபுதுப்பட்டு, வாணியம்பாடி, ஆலங்காயம் (திருப்பத்தூர்), ஆரணி, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), விழுப்புரம் (விழுப்புரம்), கேசிஎஸ் மில்-1 மூங்கில்துறை, மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை, அரியலூர் கேம்ப் ஏரியா (கள்ளக்குறிச்சி), வடகுத்து, விருதாச்சலம், கொத்தவாச்சேரி, தொழுதூர் (கடலூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), மஞ்சளார் (தேனி), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), இராமநதி அணை, கடனா அணை, கருப்பாநதி அணை (தென்காசி), கன்னடநதி அணைக்கட்டு (தென்காசி) திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை, கன்னிமார், திற்பரப்பு, சூரலக்கோடு, புத்தன் அணை (கன்னியாகுமரி), வொர்த் எஸ்டேட் செருமுள்ளி (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோவை), சேலம், ஆனைமடுவு அணை, வீரகனூர், சந்தியூர் KVK AWS (சேலம்) தலா 1.