
மதுரை: மதுரையில், நீண்ட நாளைக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராசன் பங்கேற்றார்.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் 30.50லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலைகளை திறந்து வைத்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 75, வசந்தநகர் 3வது மேற்கு 1வது குறுக்கு தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு 54, காஜிமார் முதல் தெரு மற்றும் ஹீரா நகர் ஆகிய 2 பகுதிகளில் ரூ.23.50 லட்சம் மதிப்பீட்டிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலைகளை மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், மேயர் இந்திராணி பொன்வசந்த்,மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, உதவி ஆணையாளர், மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன்,சுகாதார
அலுவலர், உதவி பொறியாளர்கள், கண்காணிப் பாளர்கள்,மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.