ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருஆடிப்பூர திருத்தேரோட்டம்..

IMG 20230722 WA0108 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருஆடிப்பூர திருத்தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்து ஸ்ரீஆண்டாளை தரிசனம் செய்தனர்

வைணவ திருத்தலங்களில் சிறப்பு மிக்கதாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பல்வேறு உற்சவங்கள், வைபவங்கள் நடைபெற்ற போதிலும் ஆடிப்பூர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.

IMG 20230722 135008 - 2026

இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு ஆண்டாள்-ரெங்கமன்னார் சேர்த்தியில் 16 வண்டி சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் திருநாளான 18-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத் தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 8-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்களுடன் தேரில் எழுந்தருளினர்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

காலை 8.05 மணிக்கு தேரோட்டத்தை பக்தர்கள் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா…, கோபாலா… என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரதவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.

வருகிற 24-ந்தேதி காலை இரட்டை தோளுக்கினியானில் வாழைக்குளத்தெரு தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளல் மற்றும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பன்னிரெண்டாம் திருநாளான 25-ந்தேதி காலை விடாயத்து மண்டபத்தில் உற்சவ சாந்தியும், மாலை 6 மணிக்கு ஆண்டாள்-ரெங்க மன்னார் திவ்ய தம்பதியினருக்கு புஷ்ப யாகமும் நடைபெற உள்ளது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் மு.கரு.முத்துராஜா மற்றும் கோவில் பட்டர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories