
தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் நான்காம் நாளில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் அவர் மக்களைச் சந்தித்துப் பேசினார்.
தனது திருவாடானை பகுதி அனுபவம் குறித்து அண்ணாமலை சமூகத் தளப் பதிவில குறிப்பிட்டிருப்பதாவது…
இன்றைய #EnMannEnMakkal பயணத்தில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில், பொதுமக்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியின் நலத்திட்டங்கள், நாடு முழுவதும் சென்றடைந்திருக்கின்றன என்பது, கூடியிருந்த மக்களின் அன்பில் வெளிப்படுகிறது.
தேச பாதுகாப்புக்காக பெருமளவில் ராணுவ வீரர்களை அனுப்பும் ஊர் திருவாடானை. எல்லையைப் பாதுகாக்க உயிரையே தியாகம் செய்த ஹவில்தார் பழனி அவர்களின் தியாகத்தை கௌரவிக்கும் விதமாக பிரதமர் மோடி அரசு உயரிய ராணுவ விருதான பரம்வீர் சக்ரா விருது அளித்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில், கிட்டத்தட்ட 25,000 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம், 50,000 பேருக்கு ஜல்ஜீவன் குடி நீர்த் திட்டம், 1,40,000 பேருக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள், 30,000 பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு, அரசு மருத்துவக் கல்லூரி என மாண்புமிகு பாரதப் பிரதமர் வழங்கிய நலத்திட்டங்கள் ஏராளம்.
காவிரி நீர் வரத்து குறைந்துள்ளதால் திருவாடானையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய ஊழல் திமுக அரசும் திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராமநாதபுரம் தொகுதியில் அரசு கல்லூரிகள் கொண்டு வருவோம், நான்கு வழிச் சாலைகள் அமைப்போம் என்றெல்லாம் போலி வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆர்.எஸ். மங்கலம் கண்மாயைப் போன்ற நீர்நிலைகளைச் சீரமைக்க மத்திய அரசு நிதி வழங்கியும், ஊழல் திமுக அரசு இன்னும் அதனைப் புனரமைக்காமல் இருக்கிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்க, தமிழகமும் பெரும்பங்கு வகிக்கும் என்பது உறுதி.