
- காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு
- வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு
- விபத்தில் சிக்கி சேதமடைந்த பைக்கை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை
‘ஐயோ பாவம்’ என்று விட்டுவிடக் கூடாது
வாசன் என்ற ஒரு நபர் நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் மிக விரைவாக தன் இரு சக்கர வாகனத்தை செலுத்தியதோடு பல்வேறு சாகசங்களை செய்வதாக எண்ணிக்கொண்டு பல்வேறு வாகனங்களுக்கு இடையூறு செய்ததோடு, பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் காயமடைந்துள்ளார் என்று ‘ஐயோ பாவம்’ என்று நின்று விடாமல், பொது மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் வகையில் வாகனத்தை செலுத்தியதற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
— நாராயணன் திருப்பதி,
செய்தித்தொடர்பாளர், பாஜக
இதற்கிடையே, யூடியூபர் டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிடிஎப் வாசன் சாகசம் செய்ய முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவர் காயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.