வேலூரில் புரட்டாசி முதல் சனி என்று பப்பாளி பழத்தில் பெருமாள் உருவம் தெரிந்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு பக்தியுடன் வணங்கி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் வேலூர் முத்து மண்டபம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் பழைய பேருந்து நிலையத்தில் பப்பாளி பழம் விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் அணைக்கட்டு அப்புகள் பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்து பப்பாளிப் பழங்கள் கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை பப்பாளிப் பழம் கொண்டு வருவதற்காகச் சென்ற பொழுது, மரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் கண்ட ஒரு பப்பாளி பழத்தைக் கொண்டு வந்தார்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையான அன்று, அந்த பப்பாளிப் பழத்தில் பெருமாள் முகம் போன்ற தோற்றம் காணப்பட்டது.
இதை அடுத்து அந்தப் பழத்திற்கு நாமம் அணிவித்து பூஜை செய்து, வேலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் புதிதாக கும்பாபிஷேகம் செய்யப்பட்ட லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.
இந்த அற்புத பப்பாளிப் பழத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
வீடியோ செய்தி: