நடிகர் ரமேஷ் திலக் – நவலட்சுமி இருவரின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. சூதுகவ்வும், ஆரஞ்சு மிட்டாய், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், நடிகர் ரமேஷ் திலக்.
திலகநாதன், சபீதா தம்பதியின் மகனான ரமேஷ் திலக்குக்கும், ராம்போ ராஜ்குமார், கற்பகம் தம்பதியின் மகளான நவலட்சுமிக்கும் இன்று பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் பட்டு, சென்னை பெசண்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
ஞாயிற்றுக் கிழமை இன்று காலை 8.25க்கு மணமகன் மணமகள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார். திரைத்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள், உறவினர்கள் பலர் வந்திருந்து தம்பதியரை ஆசிர்வதித்தனர்.