திருவண்ணாமலை பாஜக., வேட்பாளர் அஸ்வத்தாமன் கொடுத்த உறுதிமொழி!

ashvathaman in tiruvannamalai - 2026

விவசாயிகள் ஒவ்வொருவரையும் முதலாளிகளாக மாற்றுவேன் என்று, திருவண்ணான்மலை பாஜக., வேட்பாளா் அஸ்வத்தாமன் செய்தியாளர்களிடம் கூறினாா்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பயோ-எத்தனால் தொழிற்சாலை தொடங்கி, விவசாயிகள் ஒவ்வொருவரையும் முதலாளிகளாக மாற்றுவேன் என்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக., வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் கூறினாா்.

தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களையும், வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன. அவ்வகையில், திருவண்ணாமலை தொகுதிக்கு, பாஜக., வேட்பாளராக அஸ்வத்தாமன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

வேட்பாளராக கட்சித் தலைமையினால் அறிவிக்கப்பட்ட அ.அஸ்வத்தாமன் சனிக்கிழமை நேற்று மாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். கிரிவலப் பாதையில் உள்ள தெற்கு மாவட்ட பாஜக., அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளை வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் சந்தித்துப் பேசினாா்.

பின்னர் அவா் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியவை…

திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். இங்கே கரும்பு, நெல், மணிலா அதிகம் விளைகிறது. இவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது விவசாயிகள் அதிக லாபம் பெறும் வகையிலான எந்தத் திட்டமும் மாவட்டத்தில் செயல்படுத்தவில்லை. கரும்பு விவசாயிகள் தங்களுக்குச் சேர வேண்டிய பல கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

நான் வெற்றி பெற்றால் தொகுதியில் பயோ-எத்தனால் தொழிற்சாலையைத் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பயோ-எத்தனால் தொழிற்சாலை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்படும்.

இங்கே, இளைஞா்கள் ராணுவத்தில் சேருவதற்கான இலவசப் பயிற்சி மையம் தொடங்கப்படும். பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் வகுக்கப்படும்.

தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாதம்தோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞா்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவேன்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு பயன்தரக்கூடிய எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய எந்தத் தொழிற்சாலையையும் திமுக., மக்களவை உறுப்பினா் கொண்டு வரவில்லை.

இன்று தமிழகமே பாஜக.,வின் கோட்டையாக மாறி வருகிறது. பிரதமர் மோடியின் திட்டங்களின் வாயிலாக, தமிழகத்தில் பல மக்கள் நலத் திட்டங்கள் உருவாகியுள்ளது.

விவசாயிகளுக்கு கொடுக்கின்ற ரூ. 6 ஆயிரம் ஆகட்டும், வீட்டுக்கு குடிநீர் தரும் திட்டம், விவசாயிகளுக்கு என வங்கி கணக்கு ஆரம்பித்தல் என எல்லோருக்கும் பயன் அளிக்கக்கூடிய திட்டங்களை பிரதமர் நிறைவேற்றியுள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சி இருக்கிறது.. என்றார்.

வேட்பாளருக்கு வரவேற்பு:

தேசிய ஜனநாயகக் கூட்டணி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவண்ணாமலை நகருக்கு வந்தார்.

அப்போது அவரை பாஜக வேலூர் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலாளர் குணசேகரன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன், நாடாளுமன்ற அமைப்பாளர் நேரு, கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சங்கர், திருவண்ணாமலை வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் வழக்கறிஞர் கிஷோர் குமார், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜகவினருடன் பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வேட்பாளர் அஸ்வத்தாமன் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேட்பாளர் அஸ்வத்தாமன் . கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா புகைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் அல்லி முத்து , இவருடைய தாத்தா பரசுராம கவுண்டர்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அஸ்வத்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார். இவர் தற்போது பாஜக.,வின் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories