
பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார். மோடி பிரதமராக இருந்த இந்த பத்து ஆண்டுகளில் நூறு எபிசோட்கடந்து இந்த நிகழ்ச்சி வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியைக் கேட்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால், வானொலிக்கு விளம்பர வருவாய் இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகரித்தது.
இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை இல்லாமல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் ஒலிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “தேர்தல் காரணமாக சில மாத இடைவெளிக்குப் பிறகு மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் தொடங்க உள்ளது என்பதைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாத நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி நடைபெறும். அனைவரும் உங்கள் யோசனைகளை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 110வது பகுதி, கடந்த பிப்ரவரி 25-ல் கடைசியாக ஒலிபரப்பப்பட்டது. மூன்று மாத இடைவெளிக்குப் பின், தற்போது ஜூன் மாத இறுதி ஞாயிற்றுக் கிழமையில், மீண்டும் மனதின் குரல் ஒலிபரப்பாகவுள்ளது குறிப்பிடத் தக்கது.
பிரதமர் மோடியின் முந்தைய 110வது மனதின் குரல் நிகழ்ச்சியின் சுட்டி…





