சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன திமிலுடைய காளையின் உருவம் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி அகழாய்வுப் பணியில் கீழடி, முசிறிக்கு அடுத்தபடியாக முதல்முறையாக சூது பவள மணியில் சீரும் திமிலுள்ள காளையின் பதக்கம் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில் சுடுமண்ணால் ஆன திமிலுடைய காளையின் உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் சுடுமண் உருவ பொம்மை,சதுரங்க ஆட்ட ஆட்ட காய்கள், உள்ளிட்ட 1550க்கு மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அகழாய்வில் முன்னோர்கள் தொழிற்கூடங்கள் நடத்திருக்கான சான்றுகள் பொழுதுபோக்கில் ஈடுபட்டதற்கான சான்றுகளும் கிடைத்து வருகின்றன.சுடு மண்ணால் ஆன காளியின் உருவம் கிடைத்ததன் மூலம் அந்தக் காலத்திலேயே வீர விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்பது தெரிய வருகிறது என தொல்லியல் அகழாய்வு இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.