செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கம்; இரயில் பயணிகள் சங்கம், வா்த்தக சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு!
.
செங்கோட்டை, செப், 07, செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தல் வைத்து
செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு விரைவு இரயில் வண்டி எண்-(06242) இயக்க துவக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழச்சிக்கு செங்கோட்டை இரயில் பயணிகள் நலச்சங்க தலைவா் எல்எம்.முரளி தலைமைதாங்கினார். செயலா் கிருஷ்ணன், பொருளாளா் சுந்தரம், வர்த்தக சங்க தலைவரும் முன்னாள் நகர்மன்ற தலைவருமான எஸ்எம்.ரஹீம் ஆகியோர் முன்னிலைவகித்தனா். லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவா் சங்கரபாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனை தொடா்ந்து இரயில் லோகோபைலட், உதவி லோகோபைலட் ஆகியோருக்கு இரயில் பயணியா் சங்கம், வர்த்தக சங்க நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினா். இந்த சிறப்பு விரைவு இரயிலானது வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. .
இரயில் எண்.06241 மைசூர் செங்கோட்டை சிறப்பு ரயில் மைசூரிலிருந்து 04.09.2024 & 07.09.2024 ஆகிய தேதிகளில் 21.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 16.50 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும் இரயில் எண்.06242 செங்கோட்டை மைசூர் சிறப்பு ரயில் செங்கோட்டையில் இருந்து 05.09.2024 & 08.09.2024 ஆகிய தேதிகளில் 19.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 14.20 மணிக்கு மைசூரை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி செப்-05ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு தென்காசி, சிவகாசி, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களுர், மாண்டியா, மைசூரை சென்றடையும்
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலா்கள் ஜீவா, சங்கர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா்.