January 17, 2025, 7:10 AM
24 C
Chennai

ரயில்களில் பொதுப் பெட்டிகள் அதிகரிப்பு! எந்தெந்த ரயில்களில் தெரியுமா?

#image_title

திருநெல்வேலி விருதுநகர் அருப்புக்கோட்டை வழியாக இயங்கும் புதுச்சேரி – கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஒரு சாதாரண படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டியும், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயிலில் ஒரு மூன்றடுக்கு குளிர் சாதன பெட்டிக்கு பதிலாக முன்பதில்லா பெட்டி ஒன்றும், ஒரு முன்பதிவு படுக்கை வசதி பெட்டி நீக்கப்பட்டு பொது பெட்டி மொத்தம் நான்கு சேர்க்கயிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது‌.

புதுவை – குமரி விரைவு ரயிலில் 25.01.2025 முதலும், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயிலில் 18.01.2025 முதல் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

இதுபோல் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் மற்றும் சிலம்பு அதிவிரைவு ரயில் கூடுதல் பொதுப்பட்டிகள் இணைக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது கொல்லம் சென்னை எழும்பு கொல்லம் இடையில் 17 பெட்டிகளுடன் இயங்கும் விரைவு ரயில் கூடுதலாக இரண்டு புது பெட்டிகள் இணைத்து இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

நாடு முழுதும் ரயில்களில் முன்பதிவில்லா இருக்கை (பெட்டிகள்) அதிகரிக்க கோரி சுமார் 3500 மனுக்கள், 2024,ஜுலை மாதத்தில் ரயில்வேவுக்கு அனுப்பிய நிலையில் அதன் பலனாக, தென்னக ரயில்வேயில் ஒவ்வொரு ரயிலிலும் 4 பொது இருக்கை பெட்டிகள் இருக்குமாறு செய்துள்ள ஏற்பாட்டை இன்று வெளியிட்டுள்ளார்கள்.

ALSO READ:  வாடிப்பட்டி ஐயனார் கோயில் விழா: வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த கோரிக்கை!

மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, அமலாக்கம் செய்த ரயில்வே துறைக்கு பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

பாரதத்தை - குறிப்பாக அதானியை - குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்.... டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!