தேசிய நெல் திருவிழா: 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகள் பங்கேற்பு!

traditional paddy farmers - 2026
#image_title

அலங்காநல்லூரில் தேசிய நெல் திருவிழா -150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் கிரியேட் – நமது நெல்லை காப்போம் அமைப்பின் சார்பில் 18 ஆம் ஆண்டு தேசிய நெல் திருவிழா நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயிகள், 50க்கும் மேற்பட்ட தியாகராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்றார். கிரியேட் அமைப்பின் தலைவர் முனைவர் துரைசிங்கம் தலைமை தாங்கி நெல் திருவிழாவின் நோக்கங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளில் நெல் திருவிழா மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதையை கிரியேட் அமைப்பு வழங்கியுள்ளதை பற்றி கூறினார்.

பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரியேட் அமைப்பின் “வெற்றிக்கு வித்திடும் இயற்கை வேளாண்மை” புத்தகத்தை வெளியிட்டார்.

பாரம்பரிய நெல் சாகுபடி நன்மைகளான கலை கட்டுப்பாடு, பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் செயல்திறன், அதன் ஊட்டச்சத்து, மற்றும் மருத்துவ பயன்கள் குறைந்த கிளைசெமிக் குறியீடு, மற்றும் மண்வள மேம்பாடு ஆகியவற்றில் அதன் நேர்மையான தாக்கத்தை பற்றி கூறினார்.

மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண்மை துறை விவசாயிகளுக்கு வழங்கும் மானிய திட்டங்கள் பற்றி பேசினார். மாவட்ட வள பயிற்றுனர் பரணிதரன் விவசாயிகள் சாகுபடிக்கு பின் தங்கள் விளை பொருட்களை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் முறை குறித்து விரிவாக எடுத்து கூறினார்.

விழாவில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ஆத்தூர் கிச்சலி சம்பா, காலாபாத், குதிரைவால் சம்பா, பூங்கார், சீரகச் சம்பா, கருங்குருவை, சொர்ண மசூரி, ரத்தசாலி, அறுபதம் குறுவை, வெள்ளை கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களில் ஏதேனும் ஒன்று தலா 2 கிலோ வழங்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories