ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் இருந்து ஒரு மினி பஸ் நேற்று 27ந்தேதி காலை பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் வேலைக்கு செல்லும் ஆண் பெண் தொழிலாளர்கள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் நிதிஷ் மைக்கேல் ராஜ் வயது 45 என்பவர் ஓட்டி வந்தார்.
பஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்திநகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வந்த போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிசாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து இந்த பஸ்ஸில் பயணம் செய்தோர் அலறி அடித்துக் கொண்டு கூச்சல் போட்டுக்கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பஸ்ஸை விட்டு வெளியே வர முயற்சி செய்தனர்.
இந்த நிலையில் பஸ் கவிழ்ந்த சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தோர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மம்சாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ராஜபாளையம் வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் இருந்தும் 108 உயிர் மீட்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. விபத்து வாகன மீட்பு வாகனம் வந்து கவிழ்ந்து கடந்த பஸ்ஸை அப்புறப்படுத்தியது
இந்த விபத்தில் மம்சாபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் நிதீஷ் குமார் வயது 16, வாசு ராஜா வயது 14 ஆகியோரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரி மாணவர் சதீஷ்குமார் வயது 20, காந்திநகர் மாடசாமி வயது 28 கிருஷ்ணன் கோவில் கல்லூரி ஊழியர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட ஆண் பெண் பஸ் பயணிகள் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து காயம் அடைந்த அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சாரை சாரையாக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்ததாக இவர்கள் நான்கு பேரும் மம்சாபுரம் சுற்று பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
மேலும் இந்த பஸ்ஸில் பயணம் செய்த 30க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆண்கள் பெண்கள் ஆகியோர் பலத்த காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் இதில் 20 க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
விபத்து குறித்து அறிந்த மம்சாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கண்ணீருடன் கதறியபடி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர் மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மினி பஸ் அதிவேகத்தில் சென்று அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். பஸ் கவிழ்ந்து ஒரே ஊரை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.